"சென்னை" வாரம் (Chennai Week)
2007-08-17 by விருபா - Viruba |
2
கருத்துகள்
மேலைநாடுகளில் பல நகரங்களில் வாழும் மக்கள் அந்நகரம் தோற்றம் பெற்ற நாளை, தற்காலத்தினருக்கு அந்நகரத்தின் தோற்றுவாய் பற்றிய வரலாற்றுப் பெருமைகளை தெரிந்துகொள்ள உதவியாக, நகரத்தின் தினமாக கொண்டாடுவது வழக்கத்தில் உள்ளது. இந்தியாவிலும் சில நகரங்களின் தினம் கொண்டாடப்படுகிறது.
பல வருடங்களாக சிறிய அளவில் கொண்டாடப்பட்டு வந்த "சென்னை வாரம்", கடந்த சில வருடங்களாக பரவலாக கொண்டாடப்படும் அளவிற்கு மாற்றம் பெற்றுள்ளது. இக்கொண்டாட்டங்கள் ஆகஸ்டு மாதம் 19 முதல் 26 வரை நடைபெறும். பத்திரிகைகள், தன்னார்வ அமைப்புகள்,கேளிக்கை விடுதிகள், கல்லூரிகள் என்று பலராலும் தனித்தனியே சிறிய அளவில் "சென்னை வாரம்" கொண்டாடப்படுகிறது. இவ்வருடத்திற்கான "சென்னை வாரம்" சுமார் 50 வெவ்வேறு நிகழ்வுகளைக் கொண்டதாகத் கணிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வருடத்திற்கான "சென்னை வாரம்" நிகழ்வின் ஒரு அங்கமாக 2007.08.15 அன்று சென்னை ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் இந்து நாளிதழுடன் இணைந்து "சென்னையின் ஆரம்பகாலப் பதிப்புகள்" என்ற தலைப்பில் 1800 களிலும் 1900 களின் ஆரம்ப ஆண்டுகளிலும் சென்னையில் பதிப்பிக்கப்ட்ட நூல்களைப் பற்றிய கண்காட்சியை தொடங்கியுள்ளது.
இக் கண்காட்சியை வார நாட்களில் மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரையும், வார இறுதி நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 8.00 வரையும் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர். அனுமதி இலவசம்.
இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு 15.08.2007 அன்று மாலை 4.30 மணிக்குத் தொடங்கியது.
ஆரம்ப நிகழ்வில் வரலாற்று ஆய்வறிஞர் ஆ.இரா.வெங்கடாசலபதி உரையாற்றினார். அவர் "சென்னை வாரம்" என்பது ஆங்கிலத்தில் மட்டும் கொண்டாடப்படுவது என்றில்லாமல் தமிழிலும் கொண்டாடப்பட்டால் மாத்திரமே அனைத்து மக்களையும் சென்றடைவதாக இருக்கும் என்று குறிப்பிட்டு தனது உரையைத் தமிழிலேயே நிகழ்த்தினார். தனது உரையில் ஆரம்ப கால தமிழ்ப்பதிப்புகள் பற்றிய பல்வேறு நிகழ்வுகளை ஒரு பருந்துப்பார்வையில் தொட்டுப் பேசினார். வண்ணச்சாரம் தண்டபாணி சுவாமிகள், ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, உ.வே.சாமிநாத ஐயர், தாண்டவராய முதலியார், சென்னை கல்விச் சங்கம், சதுரகராதி, திவாகர நிகண்டு, ஆரம்ப கால அச்சகங்கள், ஆரம்ப கால புத்தகம் கட்டுவோர் என்று பல விடயங்களை அவருடைய பேச்சில் உள்ளடக்கினார்.
ஆரம்ப நாட்களில் சென்னையின் பதிப்புத் தொழிலின் மையம் "பிராட்வே" பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றதைக் குறிப்பிட்டு, இன்று அம் மையமானது தியாகராய நகருக்கு இடம் பெயர்ந்துள்ளதையும் குறிப்பிட்டார்.
அத்துடன் சென்னையில் எப்படி மார்கழி மாதம் கச்சேரி காலமாக பேசப்படுகிறதோ / கொண்டாடப்படுகிறதோ, அதே போன்று எதிர்வரும் காலங்களில் சென்னை வாரமும் பேசப்படும் அளவில், நகரத்தில் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடும் ஒரு நிகழ்வாக மாறும் என்றும் எதிர்வு கூறினார்.
கண்காட்சியில் வைக்கப்ட்டிருந்த சில ஆரம்ப கால இதழ்கள், அகராதிகள் படங்களாக...
1.காந்தி
2.தமிழன்
3.சதுரகராதி
காண்காட்சி அழைப்பிதழ்
வல்லினம்
by விருபா - Viruba |
0
கருத்துகள்
புதுச்சேரி - இலாசுப்பேட்டையிலிருந்து வெளிவரும் காலாண்டிதழ் "வல்லினம்" ஆகும்.
இதன் ஆசிரியர் : மகரந்தன்
பொறுப்பாசிரியராக மு.சுதர்சனும், ஆசிரியர் குழுவில் கே.பழனிவேல், அ.சதீஷ், பா.ஜெயகணேஷ் ஆகியோரும் பணியாற்றுகின்றனர்.
வெளியிடுபவர் : G.புனிதா
2007 ஜூன் - ஆகஸ்டு இதழானது எழுதா இலக்கியச் (நாட்டுப்புறவியல்) சிறப்பிதழாக 120 பக்கங்களுடன் வெளிவந்துள்ளது.
தமிழ்99 - எ-கலப்பை - பட்டறை - கணிச்சுவடி
2007-08-10 by விருபா - Viruba |
7
கருத்துகள்
இணையத்தில் தமிழில் எழுதும் பலருக்கும் சில தவறான புரிதல்கள் உள்ளன. வலைப்பதிவு(Blog) எழுதுகிறேன் என்றால் தமிழ்மணத்தில் எழுதுகிறீர்களா? என்று கேட்கும் அளவிற்கு வலைப்பதிவும் - தமிழ் மணமும் ஒரே பொருள்படும்படி பலராலும் கருத்தில் கொள்ளப்படுகிறது.
இந்நிலைமை கடந்த மூன்று வருடங்களாக உள்ளது. இதற்கு முன்னரும் இது போன்ற பல நிகழ்வுகள் இணையத்திற்கு வெளியேயும் உள்ளது. உதாரணமாக போட்டோக் கொப்பி இயந்திரத்தின் நிறுவனப் பெயரான Xerox என்பது இன்று அச்செயலையே சுட்டுவதாக தமிழகத்தில் வழக்கில் உள்ளது.
கடந்த சில மாதங்களாக தமிழ்99 விசைப்பலகையை தீவிரமாக அறிமுகப்படுத்தும் முயற்சிகளை ரவி வலைப்பதிவுலகில் முன்னெடுத்துள்ளார்.இது உண்மையில் வரவேற்கத் தக்க ஒரு முயற்சியே. 1999 இல் பல அறிஞர்கள் கூடி ஆய்வு செய்து, தமிழக அரசின் ஆதரவுடன் தமிழ்99 விசைப் பலகையை உருவாக்கி, அறிமுகப்படுத்தியிருந்தனர். ஆனால் இதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான செயல்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. தாமாக இதனைப் பயன்படுத்தத் தொடங்கியவர்களே அதிகம்.
இந்நிலையில் ரவி குழுவினரது பரப்புரைகளால் பலர் தமிழ்99 விசைப்பலகையை புதிதாக பயன்படுத்தத் தொடங்கியிருப்பதையும் காணக்கூடியாதாக இருந்தது. அண்மையில் சென்னைப் பல்கலைக் கழக பவழ விழா மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் வலைப்பதிவர் பட்டறையில் வழங்கப்பட்ட கணிச்சுவடி என்னும் கையேட்டில்கூட தமிழ்99 விசைப்பலகை பற்றியதாக சில அறிமுகங்களை சக வலைப்பதிவரான சிந்தாநதி தந்துள்ளார். இவை யாவும் தமிழ்99 விசைப்பலகையின் பயன்பாட்டினை அதிகப்படுத்தும் என்பதில் மிக்க மகிழ்ச்சியே.
ஆனால்.....
பலர் தமிழ்99 விசைப்பலகையின் சிறப்பம்சமாக பேசுகின்ற விடயங்கள் உண்மையில் தமிழ்99 விசைப்பலகைக்கு உரித்துடையவை அல்ல.
எடுத்துக்காட்டாக ரவி, சிந்தாநதி உட்பட பலர் குறிப்பிடும் முதல் விடயம்
\\ ஞ ச வரிசையாக அடித்தால் அதுவே ஞவுக்குப் புள்ளி வைத்து ஞ்ச என்று எழுதி விடும். ஏனென்றால் தமிழ் இலக்கணப் படி ஞவும் சவும்
அடுத்தடுத்து வரும்போது கண்டிப்பாக ஞ்ச என்று தான் வரும். எனவே, பயனர் தனியாக ஞவுக்குப் புள்ளி வைக்கத் தேவை இல்லை. ன்ற, ங்க, ஞ்ச, ந்த, ம்ப, ண்ட எல்லாமே இப்படித் தானாகப் புள்ளி வரும். ட ட என்று இரு முறை அடித்தால் ட்ட ஆகி விடும். ன்ன, க்க, ப்ப, த்த, ண்ண, ட்ட எல்லாமே தானாகவே புள்ளி வைத்துக் கொள்ளும். \\ (கணிச்சுவடியில் பக்கம் 20 இரண்டாவது பந்தி)
அடுத்ததாக.....
\\அதேசமயம் ஒரே எழுத்தை மூன்று முறை தட்டினால் முதல் எழுத்து மட்டுமே புள்ளியிடப்படும் புத்திசாலித்தனமும் இந்த விசைப்பலகை
முறைக்கு உள்ளது. இந்த இலக்கண முறையிலான குறுக்கு வழிகள் தமிழ்99 விதிப்படி எ-கலப்பையில் இணைக்கப்பட்டுள்ளதால்...\\
(கணிச்சுவடியில் பக்கம் 21 இரண்டாவது பந்தி)
இவை இரண்டும் தமிழ்99 விசைப்பலகையின் இயல்புகளே அல்ல.
இவை யாவும் எ-கலப்பையின் இயல்புகள்.
இதனை உறுதிப்படுத்துவதற்கு, உங்கள் கணனியில் உள்ள எ-கலப்பையை அகற்றிவிட்டு முரசு அஞ்சலை நிறுவிக் கொள்ளவும். அதன் பின் நீங்கள் வழமைபோல் Note Pad இல் அல்லது Microsoft Word இல் அல்லது ஏதாவதொன்றில் தமிழ்99 விசைப் பலகையை பாவித்து தட்டச்சிட்டுப் பார்த்தால், மேற்கூறிய இரண்டு இயல்புகளும் அங்கு செயல்படாது. ஏனெனில் முரசு அஞ்சலில் இந்த சிறப்பு இயல்புகள் இல்லை.
இந்த மாதிரியான ஒரு மயக்கமான புரிதல் பல வலைப்பதிவாளர்களுக்கு ஏற்படக் காரணம், அவர்களுக்கு தமிழ்99 இற்கு முன்னராக எ-கலப்பை அறிமுகமானமை ஆகும். பலரும் எ-கலப்பை யை நிறுவி முதலில் பயன்படுத்தியது Phonetic விசைப்பலகையைத்தான்.
பின்னர்தான் Phonetic விசைப்பலகையில் இருந்து தமிழ்99 விசைப்பலகைக்கு மாறியுள்ளனர்.
இதனால்தான் எ-கலப்பையின் இயல்புகளை தமிழ்99 இன் இயல்புகளாக எண்ணும் போக்கு உருவாகியுள்ளது.

மனம் ஒளிர்ந்திட
2007-08-01 by விருபா - Viruba |
1 கருத்துகள்
நாகர் கோவிலில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த "மனம் மலர்ந்திட" மாத இதழ் பெயர் மாற்றமடைந்திருக்கிறது. 2007 ஜூலை முதல் "மனம் ஒளிர்ந்திட" என்ற பெயரில் வெளியாகிறது. இத்தகவலை இதன் ஆசிரியர் எஸ்.எட்மண்ட் எமக்குத் தொலைபேசி வழியாக தெரிவித்துள்ளார்.
"மனம் ஒளிர்ந்திட" புதிய முகவரியில் இருந்து வெளியாகிறது. இதன் வெளியீட்டுத் தகவல்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)